Tuesday, May 7, 2019

எப்படி நாங்க விவசாயம் செய்ய?

வானம் பார்த்து விளைந்த பூமி- இப்போ
மானியம் பார்த்து விளையுது சாமி
வானமும் ஏமாத்திடுச்சி
அரசும் கை விரிச்சிடுச்சி

பள்ளம் மேடு பார்த்து 
ஏரி குளம் வெட்டி
நீர்பாசனம் செய்த பூமி - இப்போ
பள்ளம் மேடு மூடி
மாடி மேல மாடிகட்டி
வீடுகட்டி குடிபோன
நீர் எங்க வந்து சேரும் சாமி

அட்சய பாத்திரமா வந்த தண்ணி
ஆயிரம் அடி தாண்டியும் வரல
அப்படி மீறி வந்த தண்ணிரும்
கலங்கி வருது கழிவுகள் கலந்து வருது

படிக்காத எங்களுக்கு தெரியல
படிச்ச நீங்களாவது சொல்லுங்க
எப்படி நாங்க விவசாயம் செய்ய?

No comments:

Post a Comment

MODULE - II - UNION AND STATE EXECUTIVE