கோடை காலம். ஏசியின் உபயோகம் அதிகமாக இருக்கும். ஏசி சர்வீஸ் செய்ய வரும் டெக்னீஷியன்கள் எல்லோரும் நன்கு விஷயம் அறிந்தவர்கள் அல்ல. நன்கு இருக்கும் ஏசியைக் கூட பீரியாடிக் செக் என்ற பெயரில் Indoor cleaning பண்ணுவாங்க. அது ஓகே. ஆனால் அவுட்டோர் செக்கிங் என்ற பெயரில் காஸ் அளவு செக் பண்றேன்னு சொல்லி ஒரு gauge ஐ போட்டு செக் பண்ணுவாங்க. அதை நேராக பிடிக்காமல் சாய்த்து பிடிப்பாங்க, gauge ம் ரப்பர் ட்யூபுக்கும் அலுமினியம் ferrule க்கும் இடையில் நிறைய உபயோகிச்சு gap வரும். இதனால் அதிகப்படியாக காஸ் லீக் ஆகும். இதனால் ஒழுங்கா இருந்த ஏஸியில் கூலிங் குறைந்து விடும். Inverter type AC எனில் Gas top up செய்ய முடியாது. முழுவதுமாக bleed செய்துவிட்டுத்தான் மீண்டும் gas அடைக்க வேண்டும் R410A என்ற வகை refrigerant. அதிக விலையுள்ளது ஒரு கிலோ 700 லிருந்து 800 வரை. ஒரு gas charge செய்ய 2000 ரூபாய் வாங்கிடுவாங்க.
அதனால் நீங்கள் செய்ய வேண்டியது. அவர்களை
1. கிரில் டெம்பரேச்சர் பார்க்கச் சொல்லுங்க. 12-12.5 deg C இருக்க வேண்டும் எந்த வகை ஏசி ஆனாலும்.
2. Out door unit current drawn 7 amps 1.5 டன் மற்றும் 5 amps 1 டன்னுக்கும் இருக்கலாம்.
இவை சரியாக இருந்தாலேயே gas சரியாக உள்ளதென்று அர்த்தம். தேவையின்றி gas chevk பண்ணி லீக் செய்ய வேண்டாம். பணம் தேவையின்றி செலவழிக்க வேண்டாம்.
உங்கள் தகவலுக்காக R410A(இன்வெர்ட்டர் ஏசி) ல் pressure 120-150 psi மற்றும் R22 refrigerant (Non inverter AC) ல் 60-70 psi இருக்க வேண்டும்.
உங்கள் உதவிக்காக...
No comments:
Post a Comment